இன்றைய நாளுக்கான வானிலை

நாடு முழுவதும் வட கிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும்  இதனால் நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல சந்தர்ப்பங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.