இன்றைய மின்வெட்டு

இன்று (11) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேரம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்படும்.

இதேவேளை, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Comments are closed.