இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் இன்று (23) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments are closed.