இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று சிறிதளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments are closed.