இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் இன்றைய தினம் மத்திய, தென், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஊவா மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியிலும், பூமத்திய ரேகையுடன் இணைந்த இந்து சமுத்திர கடலுடனும் இணைந்து காணப்படுகின்ற தாழ்மட்ட இடையூறானது தாழமுக்க பிரதேசமாக விருத்தியடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே, மறு அறிவித்தல்வரை இந்தக் கடல் பிராந்தியங்களுக்கு, மீனவர்களும், கடற்பயணிகளும் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.