இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று இரவு முதல் மார்ச் 04 ஆம் திகதி வரை மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

வட மாகாணத்திலும் கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

Comments are closed.