இபலோகம எரிபொருள் நிலையத்தில் ஒருவர் மரணம்

கெக்கிராவ – இபலோகம லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரணம் நேற்று (15) காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் முச்சக்கரவண்டி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த நபர் தன்னுடைய உந்துருளியின் தாங்கியை மாத்திரம் எடுத்துக்கொண்டு, எரிபொருள் பெறுவதற்காக தனது நண்பருடன் சென்றுள்ளார்.

அந்நபர் வரிசையில் காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கெக்கிராவ – இபலோகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.