இமாச்சலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு
உத்தரகாண்ட் மாநிலம் ஹர்ஷிலியில் இருந்து 17 பேர் கொண்ட குழு கடந்த 14-ம் தேதி மலையேற்றம் பயணத்தை தொடங்கினர். அவர்கள் ஹர்ஷிலியில் இருந்து மலை வழியாக இமாச்சலபிரதேசத்தின் கின்னனூர் மாவட்டத்தை அடையும் நோக்கத்தோடு தங்கள் பயணத்தை தொடங்கினர்.
இதற்கிடையில், உத்தரகாண்ட்-இமாச்சலபிரதேச எல்லையின் லம்ஹஹா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது, லம்ஹஹா பகுதியை கடக்க முயன்ற 17 பேரும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பனிப்பொழிவில் மாயமான 17 பேரையும் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மீட்புப்பணியில் இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினரின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். லம்ஹஹா பகுதியில் பனிப்பொழிவு தொடர்ந்து நிலவி வருவதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.