இம்மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

இம்மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20,939 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, மேல் மாகாணத்திலேயே அதிகூடிய எண்ணிக்கையானோர் பதிவாகியுள்ளனர்.

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள் மேல் மாகாணத்தில் 7,963 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு பரவும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments are closed.