இரணைமடு குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் இன்று திறப்பு

தொடர்சியான நீர்வரத்துக் காரணமாக இரணைமடுக்குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் தொடர்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாகவே குளத்தின் 2 இரண்டு வான் கதவுகள் இன்று காலை 8.00 மணிக்கு 6 அங்குலங்கள் அளவில் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீரின் அளவு மழைவீழ்ச்சியின் அடிப்படையில் மேலும் அதிகரிக்கலாம். எனவே தயவுசெய்து அனைவரும் விழிப்புடன், அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப்பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments are closed.