இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நாளை தீர்மானம்..!

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் 19 தடுப்பூசியினை 10 வாரங்களிலா அல்லது 12 வாரங்களிலா செலுத்துவது என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழு, தொற்று நோய் தடுப்பு பிரிவில் நாளை (19) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள நிலையில், அது தொடர்பான தீர்மானத்தினை எடுக்கவுள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதுவரையில் நாட்டில் 925,242 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.