இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னரே யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மீளத் திறக்கப்படும்

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறையின் பின்னரே யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் அதிகரித்தமையை அடுத்து யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எனினும் வடக்கு மாகாண சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய பாடசாலைகளை மேலும் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதற்கமைய யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே மீள திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.