இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதல்

மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் புத்தளம், முந்தலம் – மங்களஎளிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என முந்தலம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் நவடன்குளத்திலிருந்து நுரைச்சோலை நோக்கி சென்ற லொறியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரு லொறிகளின் சாரதிகளும் மற்றும் லொறியில் பயணித்தவர்களுமே படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பிரதேச மக்களின் உதவியுடன் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இரு லொறிகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளன. விபத்து தொடர்பில் முந்தலாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.