இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நேற்றையதினம் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போதே குறித்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதனால் வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை உள்ளதுடன், தொற்றுக்குள்ளான நபர்களைத் தனிமைப்படுத்தி அவர்களை சிகிச்சைகளுக்காக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணத்தால் எஹலியகொடை பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட நான்கு கிராம சேவகர் பிரிவுகளும் மற்றும் கொடக்கவெல பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.