இருவர் கொடூரமாகக் கொலை

கண்டி – கட்டுகஸ்தோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மஹங்கொட பிரதேசத்தில் கொலைச் சம்பவம் ஒன்று நேற்று (30) இடம்பெற்றுள்ளது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் மற்றைய நபரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தால் அறுத்து பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.

பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திரசிகிச்சையின் உட்படுத்தப்பட்டபோது, உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொஹலியத்த – கலகெதர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மாத்தறை – கொக்கரெல்ல பிரதேசத்தில் நேற்று (30) பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.