இரு காடுகளில் தீப்பரவல்

பேராதனை – கலஹா வீதியின் கோன பாலத்திற்கு அருகில் உள்ள காட்டில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்று (01) பிற்பகல் குறித்த பகுதியில் தீ பரவியதையடுத்து, கண்டி மாநகர சபை தீயணைப்புப் பிரிவின் வாகனங்கள், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பயன்படுத்தப்பட்டது.

இதேவேளை, நேற்று (01) பிற்பகல் பூனாகலை மலை காட்டின் கீழ் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல் இன்று (02) காலை வரை நீடித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த தீப்பரவலினால் காட்டின் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் மண்டலமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.