இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் விநியோகம் இல்லை – சாரதிகள் குற்றச்சாட்டு

வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் இன்று முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, இன்றைய தினம் கொலன்னாவை மற்றும் முத்துராஜவலை பெற்றோலிய முனையங்களுக்கு 100க்கும் அதிகமாக எரிபொருள் தாங்கி ஊர்திகள் சென்றுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கும் வரும் வரையில் மட்டுப்பாடுகளின் கீழ் இன்று முதல் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.

வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments are closed.