இலங்கைக்கு உதவி புாியவேண்டும் – ஐநா வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியம், தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் ஏனைய நாடுகள், இலங்கைக்கு உதவி புரிய முன்வர வேண்டும் என வெளிநாட்டு கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசேட நிபுணர் பேராசிரியர் அட்டியா வரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்து வருகிறது.

இந்தநிலை முழு நாட்டு மக்களின் உரிமைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடன் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நாடுகள் மனித உரிமைகளை நிறைவேற்றும் விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக வெளிநாட்டு கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசேட நிபுணர் பேராசிரியர் அட்டியா வரிஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.