இலங்கைக்கு வந்த விஷம் கலந்த தேங்காய் எண்ணெய்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் கடந்த 03 மாதங்களுக்குள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் உணவு நிர்வாகப்பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த பரிசோதனைகளில் இந்த தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் நஞ்சு இரசாயன பதார்த்தங்கள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தேங்காய் எண்ணெய் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸிலி ருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்களடங்கிய மீன் கொள்கலன்களும் திருப்பி அனுப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மீன்களில் ஆசனிக் மற்றும் பாதரசம் ஆகியன சேர்க்கப்பட்டிருந்ததாக பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.