இலங்கையிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்துள்ள சர்வதேச மாணவர் ஒருவரின் அனுபவம்!!

கொரோனா முடியும் வரை எதுவும் செய்யாமல் சும்மா இருக்க முடியுமா? ஆகவே ரிஸ்க் எடுத்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தேன்.

ஆனால் வாழ்க்கை நான் எதிர்பார்த்ததுபோல் இல்லை என்கிறார் இலங்கையிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்துள்ள சர்வதேச மாணவர் ஒருவர்.

நண்பர்களையும் குடும்பத்தினரையும் பிரிந்து, சிவில் இஞ்சீனியரிங்கில் மேற்படிப்பு படிப்பதற்காக கனடாவுக்கு வந்தார் Dilusha Kankanamge.

வெளிநாடு ஒன்றில் கல்வி கற்பது இது தனக்கு முதல் முறை இல்லை என்று கூறும் Kankanamge, ஆனால், கொரோனா காலகட்டத்தில் ஒரு சர்வதேச மாணவராக இருப்பது வித்தியாசமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

Windsorக்கு வருவதற்கே நீண்ட நடைமுறைகளைக் கடந்துவரவேண்டியிருந்தது என்று கூறும் Kankanamge, இரண்டு மாதங்களில் தான் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டியிருந்தது என்றும், இரண்டு வாரங்களுக்கு முற்றிலும் தனியாக தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருந்தது என்றும் கூறுகிறார்.

நகரில் தனக்கு யாரையும் தெரியாது என்பதாலும், ஒரு வாரத்திற்கு சொந்த ஊரிலிருப்பவர்களுடனும் தொடர்புகொள்ள இயலவில்லை என்பதாலும் தனிமை கடினமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார் அவர்.

ஓட்டப்பயிற்சி செய்ய கூட முடியாமல் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடக்கவேண்டியிருந்தது என்று கூறும் Kankanamge, தனக்கு மனோரீதியாக அது கடினமானதாக இருந்தது என்கிறார்.

மொபைல் திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய நேரம் கிடைக்காததால், யாரிடமும் மொபைலில் கூட தொடர்புகொள்ள இயலவில்லை என்கிறார் அவர்.

ஸ்காலர்ஷிப் காரணமாக கனடா வந்தே ஆக வேண்டிய ஒரு சூழ்நிலை தனக்கு என்று கூறும் Kankanamge, ஆனால், உண்மையான மாணவ வாழ்க்கை அனுபவத்தை இழந்ததுபோன்று உணர்வதாக தெரிவிக்கிறார்.

அவருக்கு வெளியே சுற்றவும் புது நண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும் மிகுந்த ஆசை, ஆனால், இந்த கொரோனா சூழல், விடுவேனா என்கிறது.

Comments are closed.