இலங்கையை அச்சுறுத்தும் கரும்பூஞ்சை

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் கரும்பூஞ்சை நோயினால் ஏற்பட்ட முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னரான விளைவுகளால் ஏற்படும் கரும்பூஞ்சை நோய் பாதித்த ஒருவர், இலங்கையில் மரணிப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.