இலங்கையை வந்தடைந்த முதலாவது சுற்றுலா குழு

கொவிட்-19 காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் 9 மாதங்களுக்கு பின்னர் முதலாவது சுற்றுலா பயணிகள் குழு இலங்கையை வந்தடைந்துள்ளது.

இதற்கமைய யுக்ரைனில் இருந்து 180 சுற்றுலா பயணிகள் அடங்கிய குழு மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவர்களுடன் இரண்டு குழந்ததைகளும் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று  பிற்பகல் 2 மணியளவில் அவர்கள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்குள்ள எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

Comments are closed.