இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று பரவலுக்கு மத்தியிலும், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அவர்களுக்குரிய சுகாதார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்ற போதிலும் ஆசிரியர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறானதொரு சூழலில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Comments are closed.