இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஹொங்கொங் தீர்மானம்

கொவிட்-19 பரவல் காரணமாக, இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டுக்கு பயணிப்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஹொங்கொங் மேலும் கடுமையாக்கவுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக, பங்களாதேஷ், கம்போடியா, ஃப்ரான்ஸ், கிறீஸ், ஈரான், மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, தன்சானியா, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அமெரிக்கா முதலான நாடுகளுக்கு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளன.

இதற்மைய, இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஹொங்கொங்கிற்குள் உள்நுழையும்போது, இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.