இலங்கை கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

களுத்துறை மாவட்டத்தின் 2021ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் வேலைத்திட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டது.

அதில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவிக்கும் போது மேலும் கூறியதாவது..

எமது அரசாங்கம் கல்வித்துறையில் எண்ணமுடியாத அளவிற்கு வெற்றியை பெற்றுக்கொண்டது. கொவிட் தொற்று முழு உலகையும் ஆட்கொண்ட சந்தர்ப்பத்தில் எம்மைவிட செல்வந்த நாடுகளின் பாடசாலைகள் கூட மூடியே காணப்பட்டன.

எனினும், முறையான முகாமைத்துவம் மற்றும் தயார்ப்படுத்தல் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல எமக்கு முடியுமானதாயிற்று.

ஒரு வாரத்திற்கு முன்னதாக சாதாரணத் தரப் பரீட்சையை நிறைவுசெய்தோம். ஆறு இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் 5413 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றினர்.

பரீட்சை ஆரம்பிக்கும் போது கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38 மாணவர்கள் காணப்பட்டனர். 322 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். 40 விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. பரீட்சை நிறைவுபெறும் போது 62 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே காணப்பட்டனர்.

ஜுன் மாதத்தில் சாதாரணத் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின்றன. ஜுலை மாதத்தில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. உயர் தரப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என பலர் கூறினர்.

எனினும் 3 இலட்சத்து 60 ஆயிரம் பரீட்சைக்கு தோற்றினர். ஏப்ரல் மாதத்தில் பெறுபேறுகள் வெளியாகும். 2021 செப்டம்பர் மாதத்தில் அப்பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியும் எனத் தெரிவித்தார்.

Comments are closed.