இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தனியார் மயமாக்கப்படவுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது..!

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தனியார் மயமாக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் தரவு அமைப்பு, வெளிநிறுவனம் அல்லது வெளித்தரப்பினருக்கு எந்த விதத்திலும் வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் புள்ளிகளை கணினிமயப்படுத்தும் நடவடிக்கை, அதன் உள்ளக பணிக்குழாமின் ஊடாக இடம்பெறும்.

இந்த நடவடிக்கைக்காக எந்தவொரு தனியார் நிறுவனமோ அல்லது வேறு தரப்பினரோ தொடர்புபட மாட்டார்கள்.

எண்மான செயற்பாடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும், திணைக்களத்தின் உள்ளக அதிகாரிகளாலேயே மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.