இலங்கை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்ட்டம்!

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்காக விண்ணப்பிப்பதற்கென வழங்கப்பட்டிருந்த காலம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

சுமார் 11,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இணையத்தளத்தின் ஊடாக நேர்முகத் தேர்வு இடம்பெறும். நேர்முகத் தேர்வு இடம்பெறும் தினம் பற்றியும் இணையத்தளத்தின் ஊடாக அறிவிக்கப்படும்.

அரச சார்பற்ற 15 உயர்கல்வி நிறுவனங்களில் 96 பாடநெறிகளைப் பயில்வதற்காக மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 2017ம் 2018ம், 2019ம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழக வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

பாடநெறிகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒருவருட கால சலுகைக்காலம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.