இலங்கை மீண்டும் சிவப்பு வலயத்துக்குள்

நாட்டு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது. எனவே, நாட்டை பச்சை வலயத்திலெயே நீடிக்கவைப்பது மக்களின் கடமையாகும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் நாயகம் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது,

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்த நாடுகள் மட்டுமே பச்சை வலயத்தில் சேர்க்கப்படும். இந்நிலையில் தற்போது இலங்கையில் கொரோனா தொற்று பரவலில் தாக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் இலங்கையும் சிவப்பு வலயத்திலிருந்து பச்சை வலய்த்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கையில் தற்போது பதிவாகும் நாளாந்தக் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் நாட்டை  மீண்டும் கொரோனா பச்சை வலயத்துக்குள் அனுமதித்துள்ளன என  சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் நாயகம் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

Comments are closed.