இளம் நடிகர் சரத் சந்திரன் தற்கொலை

மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்த பிரபல இளம் நடிகர் சரத் சந்திரன் (வயது 37). கேரளாவின் மலப்புரத்தில் கக்காடு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் அவரது உடல் அருகே தற்கொலை குறிப்பு ஒன்றையும் கண்டெடுத்தனர். அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என தெரிவித்து உள்ளார். அதிக மனஅழுத்தத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கமாலி டைரீஸ், ஒரு மெக்சிகன் அபராதா, சி.ஐ.ஏ., கூடு உள்ளிட்ட பல மலையாள படங்களில் அவர் நடித்துள்ளார். இதுதவிர, பல விளம்பர படங்களிலும் கூட நடித்திருக்கிறார். அவருக்கு பெற்றோர் மற்றும் இளைய சகோதரர் ஒருவர் உள்ளனர்.

Comments are closed.