இளைஞனுக்கு எமனான இராணுவ வாகனம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் மோதி இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன்,   சம்பவத்தில் புதுக்குடியிருப்பு – வேணாவில் பகுதியை சேர்ந்த மாரிமுத்து பவிசாந்த்(வயது21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில் , மழையும் பெய்து கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed.