ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டருக்க தங்கப் பதக்கம் கிடைத்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 87.58 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

Comments are closed.