ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடிய வைக்கும் விசித்திர காய்ச்சல்

ஈராக்கில் மூக்கு வழியாக ரத்தம் வடிய செய்யும் புதுவித காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது உலக நாடுகளை மீண்டும் அலற வைத்துள்ளது… இந்நிலையில், இந்தியாவிற்குள் மீண்டும் இந்த நோய் பரவும் அச்சம் எழுந்துள்ளது.

மற்ற வைரஸ் தொற்றுகளை போல இந்த வைரஸ் தொற்றின் பிறப்பிடமும் ஆப்பிரிக்கா தான். அதனால் தான் இந்த வைரசுக்கு காங்கோ காய்ச்சல் என்று கூறுகிறார்கள். 43 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஈராக்கிற்குள் நுழைந்துவிட்டது. ஆனால் இன்றோ, நோய் பாதிப்புக்கு ஆளாகும் ஐந்து பேரில் இருவர் உயிரிழப்பது தான் பீதியை அதிகரித்துள்ளது.

ஆடுகளும், மாடுகளும் ஒரு வித உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும் போது, அந்த உண்ணி மூலமும், இறைச்சிக்காக ஆடுகள் வெட்டப்படும் போதும், விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களும் இந்த காய்ச்சல் பாதிப்பிற்கு எளிதில் ஆளாகி விடுகின்றனர். காய்ச்சலோடு வாந்தியுடன் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் ரத்தக்கசிவும் ஏற்படுகிறது.

Comments are closed.