உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் மீட்பு

கொத்தமல்லி என்ற போர்வையில் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் ஒருகொடவத்தை கொள்கலன் களஞ்சியசாலையில் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் குறித்த கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக மேலதிக சுங்க பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றைய தினம் குறித்த கொள்கலன்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவற்றில் விவசாய கழிவுகள் இருந்தமை தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொள்கலன்கள் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் அவற்றை மீளவும் உக்ரையினுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

Comments are closed.