உக்ரைனுக்கு அதி நவீன ராக்கெட் விற்பனை

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 3 மாதங்களை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைன் போரில் தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத சோகத்தில் தவித்த ரஷியா, இப்போது தான் சுதந்திர நாடுகளாக அங்கீரித்த கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை கொண்டுள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முற்றிலுமாய் கைப்பற்றுவதில் முனைப்பு காட்டி வருகிறது.அங்கு முக்கிய நகரங்களையும், கிராமங்களையும் பிடித்து வருகிற நிலையில் ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. இந்த நிலையில், ரஷியா வரை சென்று தாக்கும் வல்லமை கொண்ட நவீன ராக்கெட்டுகளை உக்ரைனுக்கு அமெரிக்கா விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதை நிராகரித்துள்ள அமெரிக்க அதிபர் புதின், “ரஷியா வரை பாய்ந்து தாக்கும் திறன் கொண்ட ராக்கெட் அமைப்புகளை உக்ரைனுக்கு அமெரிக்கா விற்காது” என்றார்.

Comments are closed.