உத்தர பிரதேசத்தில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ந் தேதி நடந்தது. 2-வது கட்ட ஓட்டுப்பதிவு 14-ந் தேதியும், 3-வது கட்டம் ஓட்டுப்பதிவு 20-ந் தேதியும், 4-வது கட்டம் 23-ந் தேதியும், 5-வது கட்டம் 27-ந் தேதியும், 6-வது கட்டம் மார்ச் 3-ந் தேதியும் நடந்து முடிந்தது. இதுவரை 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது.

இந்த நிலையில், 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (7-ந் தேதி) நடக்கிறது. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

நக்சல்கள் ஆதிக்கம் உள்ள சாகியா, ராபர்ட்கஞ்ச், துத்தி ஆகிய தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படும். மற்ற தொகுதிகளில் 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் 10-ந் தேதி எண்ணப்படுகிறது. 5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் தேர்தல் முடிவு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.