உயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு!

அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றையதினம் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறும் மாணவர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் நடாத்த திட்டமிட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குறித்த கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளை, எதிர்வரும் ஜுன் மாதமளவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.