உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிப்பு..!
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை இடம்பெறும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனை அறிவித்துள்ளார்.
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அதேநேரம், இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல் காரணமாக, பாடசாலை பாடவிதானங்களை முழுமைப்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும். 200 நாட்களுக்கு பாடசாலை கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
எனினும், கடந்த ஆண்டில் 150 நாட்கள் அளவிலேயே பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மேல் மாகாணத்தில் 130 இற்கும் குறைந்த நாட்களே பாடசாலை செயற்பாடுகள் இடம்பெற்றன.
நாட்டின் அனைத்து பாகங்களிலும், ஒரே அளவில் இணையதள வசதி இல்லாமையினால், கிரமமான முறையில் அந்தக் குறைப்பாட்டை நிவர்த்திப்பதில் தடங்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், மிக அவதானத்துடன் கலந்துரையாடி தீரமானங்கள் மேற்கொள்ளப்பட்;டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.