உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட 106 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.03 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,03,32,696 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,03,60,687 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 16 ஆயிரத்து 370 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,45,55,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 88,436 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  – பாதிப்பு – 5,32,22,424, உயிரிழப்பு –  8,37,854, குணமடைந்தோர் – 4,10,31,018

இந்தியா   –    பாதிப்பு – 3,47,89,397, உயிரிழப்பு –  4,79,682, குணமடைந்தோர் – 3,42,30,354

பிரேசில்   –    பாதிப்பு – 2,22,39,436. உயிரிழப்பு –  6,18,484, குணமடைந்தோர் – 2,14,14,318

இங்கிலாந்து- பாதிப்பு – 1,18,91,292, உயிரிழப்பு – 1,47,857, குணமடைந்தோர் – 99,61,369

ரஷ்யா            – பாதிப்பு –  1,03,92,020, உயிரிழப்பு – 3,04,218, குணமடைந்தோர் – 92,59,771

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி – 93,07,124

பிரான்ஸ்  – 91,16,068

ஜெர்மனி – 70,09,634

ஈரான்  –  61,84,762

ஸ்பெயின் – 57,18,007

இத்தாலி – 56,47,313

அர்ஜெண்டினா – 54,60,042

கொலம்பியா – 51,24,690

இந்தோனேசியா – 42,61,759

போலந்து – 40,49,838

Comments are closed.