ஊஞ்சலில் கழுத்து இறுகி உயிரிழந்த 27 வயது நபர்!

புத்தளம் – முந்தல் பகுதியில் அண்டனா வயரை கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் கழுத்து சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் முந்தல் – வேலுசுமனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு முன்பாக உள்ள ஊஞ்சலில் அமர்ந்திருந்த வேளையில் அவர் இவ்வாறு கழுத்து சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவருக்கு 3 மற்றும் 7 வயதுகளில் இரு பிள்ளைகள் உள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

சம்பவம் தொடர்பில் முந்தல் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கின்றது.

Comments are closed.