என்னைப் பயன் படுத்திவிட்டனர்: யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராசா கவலை

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும்படி எனக்கு அழுத்தத்தின் மேல் அழுத்தம் தந்தவர்கள் இப்பொழுது இதில் தமக்கு தொடர்பில்லையென கூறுவதாக யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராசா கவலை வெளியிட்டுள்ளார்.

தமக்கு அழுத்தம் கொடுத்த பலர் கொழும்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமக்கும் தூபி இடிப்பிற்கு தொடர்பில்லை என தெரிவிக்கிறார்கள் துணைவேந்தர் சி.சிறிசற்குணராசா தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

பாதுகாப்பு தரப்பு, பல்கலைகழகங்களின் மானியங்களின் ஆணைக்குழு என்பன சொல்ல முடியாத அழுத்தங்களை தந்ததாகவும் அவற்றிற்கான ஆவணங்களும் தன்னிடமுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாம் அவற்றை பல்கலைகழகத்திற்குள் உரிய தரப்பினரிடம் அவற்றை வெளிப்படுத்துவேன் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி துணைவேந்தர் சி.சிறிசற்குணராசா கவலை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது..

Comments are closed.