என் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் , இளைஞர் விபரீத முடிவு

சென்னை ராமாபுரத்தில் , தன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம் என இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் அர்ஜூன் எனும் 23 வயதான இளைஞரே இவ்வாரு உயிரி மாய்த்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் அர்ஜூன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவரை பார்க்க் வீட்டிற்கு சென்ற நபர் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது அர்ஜூன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இராயலா நகர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் தொங்கிய அர்ஜூனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் பொலிஸாரின் சோதனையில், அர்ஜுன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், “எனக்கு வாழ பிடிக்கலை. எல்லோரும் இருந்து நான் தனியாக இருப்பது போல் ஃபீல் பன்றேன். என்னால வாழ முடியல. என் வாழ்க்கை இப்படியே இருக்கு, அதனால தா நான சாக போறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இப்படிக்கு நான் என எழுதியுள்ளார்.

அத்துடன் கடிதத்தில் கடைசி ஆசை என்னுடைய கடைசி ஆசை என் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும், அப்படியே எனது உடலை பெற்றோரிடம் ஒப்படையுங்கள் என எழுதி வைத்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.