எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதியிலிருந்து எரிந்த நிலையில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது நுகேகொடை பகுதியை சேர்ந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபருடையது என தெரியவந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்டிருந்த நபரானவர் நேற்று மாலை முதல் குறித்த விடுதியில் தான் தங்கியிருந்தார் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சமத்துவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments are closed.