எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவர் கைது

சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவர் பொல்கஹாவல மற்றும் யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 500 லீற்றர் டீசல், 306 லீற்றர் பெற்றோல் மற்றும் ஆயிரத்து 670 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மயிலங்காடு, சுன்னாகம் மற்றும் யட்டிகல் ஒலுவ பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தொடர்ந்தும் சுற்றி வளைப்புகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments are closed.