எரிபொருள் நெருக்கடி நாளை தவிர்க்கப்படும்

தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியானது, நாளைய தினம் தவிர்க்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்கள் விடுமுறையில் சென்றிருப்பதால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

ஆனால் இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலைய செயற்பாடுகள் வழமைக்குத் திரும்புமென, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Comments are closed.