எரிபொருள் வரிசையில் இருந்தவர்களின் கீழ்த்தரமான செயல்!

எரிபொருள் வரிசையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வடிகாலில் தள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடை தெவொலபொல பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்து எரிபொருள் இல்லாததால் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை அங்கிருந்தவர்கள் வடிகாலில் தள்ளிவிட்டு எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நபர் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Comments are closed.