எரிபொருள் வரிசையில் காத்திருந்த இளைஞன் பலி

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் ஒருவர் கொல்களன் லொறி ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில்,

“எனது மகன் வௌிநாடு போக வேண்டும் என்றார். நாட்டை விட்டுப் போகாதே என நான் சொன்னேன். நீ இங்கேயே இரு. எப்படியாவது இங்கேயே வாழ்வோம் என்றேன். பிறகு வவுனியாவுக்குப் போக வேண்டி இருந்ததால் தான் எரிபொருள் வாங்க சென்றார். இதன்போதுதான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.”

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வரிசையில் நின்ற சுமார் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் எட்டு பேர் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்ததால் உடல்நிலை மோசமானதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.