எரிபொருள் வரிசையில் காத்திருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் உயிரிழப்பு

சிலாபம்  லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் வரிசையில் காத்திருந்து விட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முன்னேஸ்வரம் வீதியின் கால்வாயில் இருந்து அவரது சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பெற்றோல் இன்மையால் உந்துருளியின் எரிபொருள் தாங்கியை துவிச்சக்கர வண்டியில் வைத்து கொண்டு அவர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பிரவேசித்துள்ளார்.

இந்தநிலையில் அவரது சடலம் மீட்கப்பட்ட இடத்தில் குறித்த துவிச்சக்கர வண்டி இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிலாபம் – ரம்பேபிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Comments are closed.