எரிவாயு தட்டுப்பாடு

தற்போதைய நிலையில் எரிவாயு தட்டுப்பாடு மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

டொலர் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியு.கே.எச்.வேகப்பிட்டிய எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த நிறுவனத்திற்குச் சொந்தமான 10,000 டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது.

குறித்த எரிவாயு தொகை உரிய தரத்துடன் உள்ளமை உறுதி செய்யப்பட்டமையை அடுத்து அதனை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, 10 நாட்களுக்கு ஒரு முறை அவ்வாறான கப்பலை நாட்டுக்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

Comments are closed.