ஐஐடி கான்பூருக்குத் தேர்வாகிய பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள்

கேரளா பையனூரில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் வேலை செய்து வருகிறார் ராஜகோபாலன். அவரது மகள் ஆர்யா. அவர் ஐஐடியில் எம்.டெக் படிக்க தேர்வாகியுள்ளார். இதற்கு இணையதளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஆர்யா  ஐஐடிக்கு தேர்வானது, அவரது தந்தைக்கு மட்டுமில்லாமல் நாட்டின் ஆற்றல் துறை சார்ந்த அனைவருக்கும் பெருமை என குறிப்பிட்டு டுவிட் செய்து உள்ளார்.

 

Comments are closed.