ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்.14 முதல் பள்ளிகள் திறப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பிப்ரவரி 14 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து பல்வேறு நாடுகளும் மீண்டும் கல்வி நிலையங்களைத் திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தொலைதூரங்களில் உள்ள மாணவர்களுக்கு இணைய வகுப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.